மோட்டார் சைக்கிள் மோதி ஆடு வியாபாரி பலி


மோட்டார் சைக்கிள் மோதி ஆடு வியாபாரி பலி
x

மோட்டார் சைக்கிள் மோதி ஆடு வியாபாரி பலியானார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 62). ஆடு வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி வியாபாரத்தை முடித்துவிட்டு திருமானூரில் இருந்து கீழக்கொளத்தூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கலியமூர்த்தி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கலியமூர்த்தி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story