காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் ஆட்டுப்பட்டியில் புகுந்து வெறி நாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் செத்தன.

காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் ஆட்டுப்பட்டியில் புகுந்து வெறி நாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் செத்தன.
x

காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் ஆட்டுப்பட்டியில் புகுந்து வெறி நாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் செத்தன.

திருப்பூர்

காங்கயம்

காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் ஆட்டுப்பட்டியில் புகுந்து வெறி நாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் செத்தன.

ஆட்டுப்பட்டி

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலை ராமபட்டிணம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி விவசாயி. தோட்டத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து 20 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் ஆடுகளை மேய்ச்சல் நிலத்தில் விட்டிருந்தார்.

மாலை வழக்கம்போல் ஆடுகளை ஆட்டுப்பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் நேற்றுகாலை ஆட்டுப்பட்டியை பார்க்க வந்துள்ளார். அப்போது பட்டிக்குள் 5 ஆடுகள் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் 5 ஆடுகளுக்கு மேல் காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

இரவு நேரம் வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆய்வு

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த வருவாய்த்துறை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். செத்துப்போன போன ஆடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இதுபோல் கால்நடைகளை தாக்கி வரும் வெறிநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story