நாய் கடித்து ஆடுகள், கோழிகள் செத்தன
நாய் கடித்து ஆடுகள், கோழிகள் செத்தன.
புதுக்கோட்டை
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும், மனிதர்களையும் கடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். நேற்று முன்தினம் செரியலூர் இனாம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் தனது ஆடுகளை அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டி வைத்திருந்த போது அங்கு வந்த நாய் 2 ஆடுகளையும், 5 கோழிகளையும் கடித்து கொன்று விட்டு ஓடிவிட்டது. இதே போல அதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில ஆடுகளை நாய்கள் கடித்து குதறிக் கொன்றுள்ளது. ஊராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story