ஒத்தைக்கு ஒத்த வாடா... ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்ரோசத்துடன் சண்டையிடும் ஆடுகள்
ராமநாதபுரம்- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு ஆடுகள் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று முட்டி விளையாடிக் கொண்டிருந்தது.
ராமேஸ்வரம்:
தமிழகத்தில் பல கிராமங்களில் நடைபெற்று வந்த ஆடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் கிடா சண்டைகளை பார்ப்பது தற்போது அரிதாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இதனிடையே ராமநாதபுரம்- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டமாக சென்று கொண்டிருந்த ஆடுகளில் இரண்டு ஆடுகள் ஆக்ரோஷமாக தலையை வைத்து ஒன்றோடு ஒன்று முட்டி மோதியபடி விளையாடிக் கொண்டிருந்தது.
இதை அந்த வழியாக இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து சென்றதுடன் சிலர் வாகனங்களை நிறுத்தி செல்போனிலும் வீடியோ எடுத்தனர்.
Related Tags :
Next Story