கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆடுகள்


கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆடுகள்
x

கிணற்றில் ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் சேந்திமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 19-ந் தேதி இவருக்கு சொந்தமான ஆடுகளில் 6 ஆடுகள் திடீரென மாயமாகின. இதுகுறித்து முருகேசன் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் அந்த ஆடுகள் சேந்திமங்கலம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த ஆடுகளை யாரேனும் மர்மநபர்கள் கிணற்றில் தள்ளி கொன்றனரா? அல்லது விஷம் வைத்து கொன்று அதன்பின்னர் கிணற்றில் வீசினரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story