ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி


ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
x
திருப்பூர்


குண்டடம் வாரச்சந்தையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆடுகள் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் மற்றும் வாங்கி, விற்கும் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்குஉள்ளாகியுள்ளனர்.

வாரச்சந்தை

குண்டடத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடும். இந்தசந்தைக்கு குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உள்ளூர் வியாபாரிகள் மூலம் செம்மறி கிடாய்கள் மற்றும் வெள்ளாடுகள் வாங்கப்பட்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இங்கு ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.

வரத்து அதிகரிப்பு

வாரம்தோறும் குண்டடம் சந்தைக்கு 1,500 ஆடுகள் முதல் 2,000 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்படும். விற்பனைக்கு வரும் அனைத்து ஆடுகளும் காலை 8 மணிக்குள் விற்றுத்தீர்ந்துவிடும். ஆனால் கடந்த 3 வாரங்களாக ஆடுகளின் வரத்துஅதிகரித்துள்ளதால், 2ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்ததால் கடந்த 2 வாரமாகவே விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இது பற்றி ஆட்டு வியாபாரி மகேந்திரன் கூறியதாவது:-

ஆடிமாதம் என்றாலே கிடாய்வெட்டும் மாதம் என்பதற்கு ஏற்றார் போல் திருப்பூர் பனியன் கம்பெனிகள் நடத்துபவர்கள், மில் தொழிலதிபர்கள், கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள காளியம்மன், கருப்பரையன் கோவில்களில் அதிகப்படியான கிடாய் வெட்டுகளை காணமுடிகிறது. இதனால் வெள்ளாட்டு கிடாய்க்கு இந்தமாதம் முழுவதும் கடும்கிராக்கி நிலவுகிறது

அந்தவகையில் கருப்புநிற கிடாய்கள் நல்லவிலைக்கு விற்பனையாகிறது வேண்டுதலை நிறைவேற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருப்பன சுவாமிக்கு கருங்கிடாய் செலுத்துவது விசேஷமானது.

இதனால் 10 கிலோ எடை கொண்ட கருப்புநிற கிடாய்கள் மற்ற மாதங்களில் ரூ.6ஆயிரம் வரை விற்பனையாகும் ஆனால் ஆடிமாதத்தில் மட்டும் அதே எடைகொண்ட கிடாய் ரூ.7ஆயிரத்து 500 வரை விற்பனை ஆனது. அதேபோல் இறைச்சிக்கு விற்கும் இறைச்சி கடைகளில் விற்பனை குறைவாக இருப்பதால் வாங்கும் வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டாததால் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டது.


Next Story