மோர்பாளையம் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை...!
திருச்செங்கோடு அருகே மோர்பாளையம் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர் பாளையம் கால்நடை சந்தை புகழ்பெற்றது. இந்த சந்தையில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆடு, மாடு, எருமை கோழி உள்ளிட்ட கால்நடைகள் வாங்கவும் விற்கவும் விவசாயிகளும், வியாபாரிகளும் வருவது வழக்கம்.
இந்த நிலையில் பக்ரீத் முன்னிட்டு வியாபாரிகளும், இஸ்லாமியர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்க மோர் பாளையம் சந்தையில் குவிந்தனர். நாட்டுவெள்ளாடு, ஜமுனா வெள்ளாடு,முணா வெள்ளாட்டுவகைகளும், நாட்டு செம்மறியாடு துவரம்செம்மறி போன்ற ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் செம்மறி ஆடுகளே அதிகம் விற்கப்பட்டது. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விலைபோனது.
இதனால் ஆடுகளை கொண்டு வந்த பொதுமக்களும்,வியாபரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இந்த வாரம் மட்டும் சுமார் ரூ.2 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றிருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.