வேப்பூர் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி...!


வேப்பூர் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி...!
x

வேப்பூர் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரம் தோறும் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வார சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிமாக கூட்டம் காணப்பட்டது.

இதனால் அதிகாலை 2 மணி முதல் சேலம், நாமக்கல், திருச்சி, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, தேனி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமேஸ்வரம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ளாடு, செம்மறி ஆடு, கொடியாடு போன்ற ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்தனர்.

இந்த ஆடுகளை வாங்குவதற்காக காலை முதலே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் வேப்பூர் வாரச்சந்தையில் வழக்கத்தைவிட அதிகமான ஆடுகள் விற்பனையானது. ஒரு ஆட்டின் விலை ரூ. 7 ஆயிரம் முதல் 25 ஆயிரம் விரை விற்பனையானது.

இதனால் வெளியூரில் இருந்து ஆடுகளை கொண்டுவந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், பக்ரீத் பண்டிகை மற்றும் விழாகாலம் என்பதால் ரூ.5 கோடி முதல் 7 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.


Next Story