திருமங்கலம், வேப்பூர் சந்தைகளில் தலா ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை


திருமங்கலம், வேப்பூர் சந்தைகளில் தலா ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

திருமங்கலம், வேப்பூர் சந்தைகளில் தலா ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை.

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய ஆட்டுச்சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆடுகள் விற்பனை மும்முரமாக நடக்கும்.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கே ஆட்டுச்சந்தை களைகட்டியது. வழக்கத்தைவிட அதிகமானோர் திரண்டனர். ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பானையானது. நேற்று ஆட்டுச்சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது.

இதேபோல கடலூர் மாவட்டம் வேப்பூர் சந்தையிலும் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. இங்கு எல்லா பொருட்களும் கிடைக்கும் என்பதால் வழக்கத்துக்கு மாறாக சந்தை பரபரப்புடன் களைக்கட்டி காணப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். ஆடுகள் விலையும் சற்று அதிகரித்தே காணப்பட்டது.

வழக்கமாக வாரச்சந்தையில் ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடி வரைக்கும் விற்பனை செய்யப்படும். ஆனால், நேற்று சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.


Next Story