பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்


பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
x

திருப்பூரில் பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது.

திருப்பூர்

திருப்பூரில் பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது.

விநாயகர் சிலை

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டு காவேரிநகரில் அரசுக்கு சொந்தமான 5 சென்ட் நிலம் உள்ளது. அந்த இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த சிலர் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இதில் அரசுக்கு சொந்தமான அந்த இடத்தில் மேல்நிலைத் தொட்டி, பூங்கா உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே அந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 24 மணி நேரத்துக்குள் விநாயகர் சிலையை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அந்த இடத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக விநாயகர் சிலை நேற்று முன்தினம் வரை அங்கிருந்து அகற்றப்படாமல் இருந்தது.

அகற்றம்

இந்த நிலையில் நேற்று காலை சிலையை பிரதிஷ்டை செய்தவர்கள் அங்கிருந்து சிலையை எடுத்துச்சென்றனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் சிலையை வைத்தனர்.

இதையடுத்து மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story