குளத்தில் இருந்து அம்மன் சிலை மீட்பு


குளத்தில் இருந்து அம்மன் சிலை மீட்பு
x

இரணியல் அருகே குளத்தில் இருந்து அம்மன் சிலை மீட்பு

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு என்ற இடத்தில் உள்ள அய்யன்குளத்தில் நேற்று முன்தினம் வாலிபர்கள் சிலர் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது வாலிபர் ஒருவரின் காலில் வித்தியாசமான பொருள் ஒன்று தென்பட்டது. இதனால் சந்தேகமடைந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி அந்த பொருளை வெளியே எடுத்தார். அப்போது அது பீங்கானால் செய்யப்பட்ட அம்மன் சிலை என்பது தெரியவந்தது. அந்த சிலை ¾ அடி உயரத்தில், 1½ கிலோ எடையுடன் இருந்தது.

இதுகுறித்து குருந்தன்கோடு கிராம நிர்வாக அலுவலருக்கும், இரணியல் ேபாலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும், கிராம நிர்வாக அலுவலரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிலையை கிராம நிர்வாக அலுவலர் கைப்பற்றி எடுத்து சென்றார்.


Next Story