சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்கள்


சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்கள்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆடி வெள்ளியையொட்டி கோவில்களில் அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கோயம்புத்தூர்
கோவை


ஆடி வெள்ளியையொட்டி கோவில்களில் அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


சிறப்பு பூஜை


ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மனை வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை களில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.


அதன்படி நேற்று ஆடி மாதம் 3-வது வெள்ளியையொட்டி கோவையில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக கோவில் நடை காலையிலேயே திறக்கப் பட்டது. அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


500 கிலோ நவதானியங்கள்


கோவை சலீவன் வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் அம்மன் மீனாட்சி அலங்காரத்திலும், தியாகி குமரன் மார்க்கெட் டில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் கஜலட்சுமி அலங்காரத்திலும், செட்டிவீதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மன் சந்தானலட்சுமி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.


அதுபோன்று ராஜசெட்டி வீதியில் உள்ள பேச்சியம்மன் வன பத்ரகாளியம்மனுக்கு 12 கிலோவில் நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பெரியகடை வீதி மாகாளியம்மனுக்கு 500 கிலோ நவதானியங்களால் ராகு-கேது அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.


பக்தர்கள் வழிபாடு


கோவை கணபதி சத்திரோடு அண்ணாநகரில் சூலக்கல் மாரி யம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று அதிகாலை யிலேயே அம்மனுக்கு மலர்களாலும், எலுமிச்சை கனிகளிலும் அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.


அதுபோன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த கோவில்களில் பக்தர்கள் காலை முதல் வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பக்தர்கள் அதிகமாக குவிந்த கோவில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


பெரியநாயக்கன்பாளையம்


பெரியநாயக்கன்பாளையம் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில், ஜோதிபுரம் தண்டு மாரியம்மன் கோவில், முத்து மாரியம்மன் கோவில், நம்பர் 4 வீரபாண்டி மகா மாரியம்மன் கோவில் மற்றும் கல்யாண சுப்பிரமணியர் கோவில், காளி பாளையம் காமாட்சி அம்மன் கோவில், கஸ்தூரி பாளையம் சிறுகாலம்மன் கோவில், மகாலட்சுமி கோவில், குப்பிச்சிபாளையம் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி நேற்று காலை 9 மணியளவில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.



Next Story