கோகுல்ராஜ் கொலை வழக்கு: இறுதி விசாரணை ஒத்திவைப்பு - மதுரை ஐகோர்ட்டு


கோகுல்ராஜ் கொலை வழக்கு: இறுதி விசாரணை ஒத்திவைப்பு - மதுரை ஐகோர்ட்டு
x

கோகுல்ராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேர் தொடர்ந்த வழக்கு இறுதி விசாரணையை மதுரை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.

மதுரை,

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை (இறுதி மூச்சு வரை) வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு அண்மையில் விசாரணைக்கு வந்தநிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது கோகுல்ராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேர் தொடர்ந்த வழக்கு இறுதி விசாரணையை ஜூலை 21ஆம் தேதிக்கு மதுரை ஐகோட்டு ஒத்திவைத்தது. மேலும் குற்றவாளிகள் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஜாமின் வழங்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


Next Story