மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
பேட்டையில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலி
பேட்டை:
பேட்டை கட்டளை தெருவை சேர்ந்தவர் செல்லதுரை மனைவி பேச்சியம்மாள் (வயது 75). இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது உள்ளே புகுந்த மர்மநபர், பேச்சியம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது, பேச்சியம்மாள் சத்தம்போட்டு, சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டார். இதில் சங்கிலி பாதியாக அறுந்தது. எனினும் மர்மநபர் கையில் 1 பவுன் சங்கிலி சிக்கியதால் அங்கு இருந்து அவர் தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story