மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
கும்பகோணத்தில் முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சங்கிலி பறிப்பு
கும்பகோணம் காமராஜர் நகர் நாயுடு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மனைவி கலா(வயது65). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு வாசலில் பூச்செடிகள் நட்டுக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். இதில் ஒருவர் கலாவிடம் அதே தெருவில் உள்ள ஒருவரது முகவரி குறித்து கேட்டார். அவருக்கு கலா வழி கூறிக்கொண்டிருந்த போது அவர் திடீரென கலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடி ெசன்று அங்கு தயாராக நின்ற தனது கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
போலீசார் வலைவீச்சு
இதனால் அதிர்ச்சியடைந்த கலா கூச்சலிட்டார். இது குறித்த புகாரின் பேரில் கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.