முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.40 லட்சம் திருட்டு; சுவரில் வாசகம் எழுதி வைத்து சென்ற கொள்ளையன்


முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.40 லட்சம் திருட்டு; சுவரில் வாசகம் எழுதி வைத்து சென்ற கொள்ளையன்
x

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.40 லட்சம் லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

சென்னை

சென்னை, மணலி சேலைவாயல் துர்கை அவென்யூ, 12-வது தெருவைச் சேர்ந்தவர் ஜான் போஸ்கோ (வயது 63). முன்னாள் ராணுவ வீரரான இவர், திருவொற்றியூர் கான்கார்டு கன்டெய்னர் யார்டில் செக்யூரிட்டி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெசன்ட் நகரில் உள்ள தேவாலயம் சென்றுவிட்டார். மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை, ரூ.40 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மணலி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜான்போஸ்கோ வீட்டில் திருடிய கொள்ளையன், வீட்டின் சுவரில் வாசகம் ஒன்றை எழுதி வைத்திருந்ததை கண்டனர். அதில், "என் பிள்ளை விளையாட இடம் இல்லை என்றாய்?. நீ இப்போது அவதிப்படுவாய்" என எழுதியிருந்தது. எனவே ராணுவ வீரரை பழிவாங்க, இதுபோல் நகை, பணத்தை கொள்ளையடித்த கொள்ளையன் இப்படி எழுதி வைத்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ வீரர் தனது மகள் திருமணத்துக்கு அந்த நகை, பணத்தை பீரோவில் வைத்து இருந்தார்.


Next Story