தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
x

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னை,

கடந்த சில தினங்களாக சென்னையில் தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து சவரன் ரூ.38,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.60.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 60,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story