சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
x

சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

பிறந்தநாள்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு இளைஞர் அணி சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. தொண்டர் அணி சார்பில் ரத்ததானம், விவசாய அணி சார்பில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மாணவர் அணி சார்பில் ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட செயலாளர் எம்.எக்ஸ்.வில்சன் தலைமை தாங்கினார். மாநில மாணவர் அணி துணை யெலாளர் குரூஸ் திவாகர் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி செயலாளர் ஏ.எம்.ராஜேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் மாவட்ட பிரதிநிதி எஸ்.ராமகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சந்திரா, மாவட்ட மாணவர் அணி செயலாளர் அந்தோணி துரைராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரல்

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் சார்பில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு ஏரல் மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் டி.தேவராஜ், ஒன்றிய பொருளாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் தேரடி சன்னதி தெரு முகப்பில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்திகுமார் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சீமான், நகர செயலாளர் குமார், நகர துணை செயலாளர் வள்ளி, ஆறுமுகநேரி நகர துணை செயலாளர் மோசஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story