தீயில் எரிந்து 8 பவுன் நகை நாசம்


தீயில் எரிந்து 8 பவுன் நகை நாசம்
x

திருவிடைமருதூர் அருகே தீயில் எரிந்து 8 பவுன் நகை நாசமடைந்தது. மேலும் வெளிநாட்டு பணமும் கருகியது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்,

திருவிடைமருதூர் அருகே தீயில் எரிந்து 8 பவுன் நகை நாசமடைந்தது. மேலும் வெளிநாட்டு பணமும் கருகியது.

தீ விபத்து

திருவிடைமருதூர் அருகே உள்ள வேப்பத்தூர் அனகுடி சாலை பகுதியை சேர்ந்தவர் தாமஸ் என்ற குழந்தைசாமி. இவர் கூரை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை வீட்டின் மேல் செல்லும் மின்சார வயர் நெருப்பு பட்டு கூரை வீடு முழுவதும் எரிந்தது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் கருகியது. மேலும் வீட்டில் இருந்த 8 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு பணம் கருகியது. தீ மளமளவென பரவியதில் அருகில் இருந்த சேகர் என்கிற ஜகத்குரு, கமலா ஆகியோரின் கூரைவீடுகள் எரிந்தது.

சோகம்

இது குறித்து தகவல் அறிந்து கும்பகோணம் தீயணைப்புத்துறை அலுவலர் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ஒரே நேரத்தில் 3 கூரை வீடுகள் 8 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு பணம் கருகி நாசமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story