8 பவுன் நகை திருட்டு


8 பவுன் நகை திருட்டு
x

சுவாமிமலையில் கோவில் கணக்கர் வீட்டில் 8 பவுன் நகையை திருடி சென்ற மா்ம நபா்களை போலீசாா் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம், மே.28-

சுவாமிமலையில் கோவில் கணக்கர் வீட்டில் 8 பவுன் நகையை திருடி சென்ற மா்ம நபா்களை போலீசாா் தேடி வருகிறார்கள்.

நகை திருட்டு

சுவாமிமலை தெற்கு வீதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்(வயது40). இவர் சுவாமிமலை சுவாமிநாதர் கோவில் கணக்கராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு பணிக்கு பாலசுப்பிரமணியன் சென்றார். இவரது மனைவி பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ சில மர்ம மனிதர்கள் பாலசுப்பிரமணியன் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகையை திருடி சென்று விட்டனா்.

போலீசார் விசாரணை

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பாலசுப்பிரமணியனின் மனைவி வீட்டில் இருந்து நகை திருட்டுப்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.இது குறித்து சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story