15 பவுன் நகை திருட்டு


15 பவுன் நகை திருட்டு
x

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தஞ்சாவூர்


தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வீட்டின் முன்பக்க கதவு உடைப்பு

தஞ்சை வாளமர்கோட்டை பகுதியை சேர்ந்த சண்முகவேல் மனைவி பிரேமா (வயது 48). சண்முகவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி தனிதனியாக வசித்து வருகின்றனர்.இதனால் பிரேமா மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். சிலநாட்கள் கழித்து வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைகண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.

15 பவுன் நகை திருட்டு

மேலும் அதில் இருந்த 15 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story