சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Nov 2022 5:47 PM IST (Updated: 9 Nov 2022 5:50 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவர்கள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் கொண்டுவந்த டிராலி சூட்கேசில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பயணிகள் இருவரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story