சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்...!


சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்...!
x
தினத்தந்தி 10 Dec 2022 8:34 PM IST (Updated: 10 Dec 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்தி வந்த ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனா்.

அதில் சந்தேகத்தின்பேரில் 2 பயணிகளை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ரூ. 2 கோடி மதிப்புடைய 4.16 கிலோ தங்கம் இருந்துள்ளது. இவர்கள் துபாயிலிருந்து தங்கம் கடந்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story