கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளி ஆண்டு விழா


கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளி ஆண்டு விழா
x

கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளியின் முதலாம் ஆண்டுவிழா "முதல் படி" என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. பள்ளியின் மாணவ தலைவர் ஸ்ரீ கார்த்தி வரவேற்று பேசினார். கவிஞர், எழுத்தாளர் பன்முக வித்தகர், நடிகர் ஜோ மல்லூரி "தன்னம்பிக்கை" பற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பள்ளியின் நிறுவனர் ராமகிருஷ்ணன், தாளாளர் ரவிச்சந்திரன், செயலாளர் அங்கயற்கண்ணி, துணைத்தாளாளர் ஹரிஷ், அறங்காவலர்கள் பரமசிவம் தண்டபாணி, பள்ளியின் முதல்வர் அனிதா அரசு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளியின் மாணவ தலைவி நித்திலா நன்றி கூறினார்.


Next Story