கோபி காசிபாளையம் பேரூராட்சி கூட்டத்தில்காங்கிரஸ் கவுன்சிலரை தற்காலிகபதவி நீக்கம் செய்து தீர்மானம்


கோபி காசிபாளையம் பேரூராட்சி கூட்டத்தில்காங்கிரஸ் கவுன்சிலரை தற்காலிகபதவி நீக்கம் செய்து தீர்மானம்
x

கோபி காசிபாளையம் பேரூராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலரை தற்காலிக பதவி நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றியது

ஈரோடு

கோபி காசிபாளையம் பேரூராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலரை தற்காலிக பதவி நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மான புத்தகம் பறிப்பு

கோபி அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் கடந்த மாதம் 31-ந் தேதி நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க.வை சேர்ந்த பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் 12-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கோதண்டன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜனார்த்தன் வைத்திருந்த தீர்மான புத்தகத்தை பறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

பதவி நீக்கம்

இந்த நிலையில் நேற்று பேரூராட்சி தலைவர் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கவுன்சிலர் கோதண்டன் உள்பட 15 வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் கோதண்டன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை 2 மாதங்கள் கவுன்சிலர் பதவியில் இருந்து தற்காலிகமாக பதவி நீக்கம் செய்வது என தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு 8 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

காங்கிரஸ் கவுன்சிலர்

இதையடுத்து காங்கிரஸ் கவுன்சிலர் கோதண்டன் எழுந்து, 'எந்த விதியின் படி என்னை தற்காலிக பதவி நீக்கம் செய்தீர்கள். அதற்கான காரணங்களை கூறுங்கள்' என கேட்டுள்ளார். அதற்கு பேரூராட்சி தலைவர் இதுகுறித்து செயல் அலுவலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எனக் கூறினார்்.

இதனால் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து கூட்டம் முடிவடைந்தது.


Related Tags :
Next Story