மக்கள்தொகையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

வருகிற 11-ந்தேதி உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்து உள்ளார்.
வருகிற 11-ந்தேதி உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்து உள்ளார்.
உலக மக்கள் தொகை தினம்
கடந்த 1987 ஜூலை 11-ல் உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. அன்றிலிருந்து ஜூலை 11 உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் பற்றி மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுவதற்காக உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழகம் குடும்ப நலத்திட்டத்தை செயல்படுத்துவதிலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதிலும் அகில இந்திய அளவில் கேரளாவிற்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தில் உள்ளது.
இதே நிலையை தொடர்ந்து தக்க வைத்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி 2 குழந்தைகளுக்கு மேல் இல்லை என்ற இலக்கை அடைய வரும் 11-ந்தேதி உலக மக்கள் தொகை தினத்தன்று அனைவரும் உறுதிமொழி ஏற்க அரசு உத்தரவிட்டு உள்ளது. தற்போது உலக மக்கள் தொகை 733.6 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி, தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7.21 கோடி, ராமநாதபுரம் மாவட்டத்தின் மக்கள் தொகை 13,53,445 ஆக உள்ளது.
கட்டுப்படுத்த
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-ன் படி, பிறப்பு விகிதம் 12.7, இறப்பு விகிதம் 7.1, சிசு மரண விகிதம் 9.5, மகப்பேறு தாய்மார்களின் இறப்பு விகிதம் 45, சிபிஆர் 75 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் கல்வி அறிவு பெற்ற ஆண்கள் 86.8 சதவீதம், பெண்கள் 73.9 சதவீதம், மாவட்டத்தில் கல்வி அறிவு ஆண்கள் 87.8 சதவீதம், பெண்கள் 73.5 சதவீதமாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆண்கள் 25 வயதிற்கு மேல், பெண்கள் 21 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்வதுடன் 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதன் மூலம் வீட்டிலும், நாட்டிலும் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், வாழ்க்கை தரம் உயர வழிவகுக்கும். பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாக கருச்சிதைவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.






