போதைப்பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்


போதைப்பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்
x

போதை ஒழிப்பை வலியுறுத்தி போதையற்ற தமிழ்நாடு - 1 கோடி கையெழுத்து இயக்கம் நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய டுவீட்டரில் கூறி இருப்பதாவது; போதை ஒழிப்பை வலியுறுத்தி போதையற்ற தமிழ்நாடு - 1 கோடி கையெழுத்து இயக்கம் என DYFI Tamil Nadu மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பின் நிறைவு விழா சென்னை லயோலா கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்று, போதைப்பொருள்தமிழ்நாடு எனும் முழக்கத்தோடு கழக அரசு எடுத்து வரும் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்தும், போதை ஒழிப்பை ஓர் இயக்கமாக முன்நின்று செயல்படுத்துவதன் அவசியம் பற்றியும் உரையாற்றினோம்.

இந்த சிறப்புக்குரிய நிகழ்வை ஒருங்கிணைத்த DYFI Tamil Nadu தோழர்களுக்கு அன்பும், வாழ்த்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story