அய்யன்கொல்லி-பாட்டவயல் இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி-மீண்டும் இயக்க கோரிக்கை


அய்யன்கொல்லி-பாட்டவயல் இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி-மீண்டும் இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 26 May 2023 12:30 AM IST (Updated: 26 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லி-பாட்டவயல் இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்து உள்ளார்கள்.

நீலகிரி

பந்தலூர்

அய்யன்கொல்லி-பாட்டவயல் இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்து உள்ளார்கள்.

திடீரென நிறுத்தப்பட்ட அரசு பஸ்

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் இருந்து கோழிச்சால், நரிகொல்லி, அம்பலமூலா, பாட்டவயல், பிதிர்காடு, நெலாக்கோட்டை, தேவர்சோலை வழியாக கூடலூர் அரசு போக்குவரத்துகழககிளையிலிருந்து பஸ் காலை 8 மணி, மதியம் 12 மணி, மாலை 3.30 மணி, இரவு 7.30 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் அம்பலமூலா, பாட்டவயல், நெலாக்கோட்டை, கூடலூர் உள்பட பல பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், கூலித்தொழிலாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பஸ் நிறுத்தப்பட்டதால் தனியார் வாகனங்களில் 2 மடங்கு கட்டணத்தில் பயணம் செய்யும் நிலை நிலவி வருகிறது.

சிலநேரங்களில் யானை, சிறுத்தை மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.

மீண்டும் இயக்க வேண்டும்

அப்போது அவர்களை வனவிலங்குகள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போதிய பஸ்கள் இல்லாமல் மாணவ- மாணவிகள் முண்டி அடித்தபடியும் தொங்கிகொண்டும் பயணம் செய்கின்றனர்.

இதில் தற்போது இயக்கப்பட்டு வந்த பஸ்சும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அதிருப்தி தெரிவித்து உள்ளார்கள். இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி நிறுத்தப்பட்ட பஸ்ைச மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.


Related Tags :
Next Story