மின்கம்பத்தில் அரசு பஸ் மோதி விபத்து


மின்கம்பத்தில் அரசு பஸ் மோதி விபத்து
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

துடியலூர் அருகே மின்கம்பத்தில் அரசு பஸ் மோதியது

கோயம்புத்தூர்

துடியலூர்

கோவை ராக்கிபாளையம் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இதனால் அங்கு சாலையோரத்தில் நிறைய கடைகள் உள்ளன. எனவே அங்கு விபத்து ஏற்படுவதை தவிர்க்க சாலையில் குறுக்கு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன.

ஆனால் சாலையோரத்தில் கடைகள் அதிகம் உள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை மேட்டுப்பாளையம் நோக்கி அரசு பஸ் ஒன்று கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்றது. அந்த பஸ் துடியலூர் ரர்கிபாளையம் பகுதியில் திரும்பும் போது சாலையின் நடுவில் உள்ள சோலார் மின் கம்பத்தில் திடீரென்று மோதியது.

இதில் அந்த மின்கம்பம் சரிந்து ரோட்டின் நடுவே விழுந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.

இதை அறிந்த துடியலூர் போலீசார் மற்றும் குருடம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து ரோட்டில் கிடந்த மின் கம்பத்தை அகற்றினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற்றது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், சாலையோர கடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story