சிதம்பரத்தில் பாலம் அமைக்கும் எந்திரத்தில் மோதிய அரசு பஸ் - டிரைவர் பலி, 8 பேர் படுகாயம்


சிதம்பரத்தில் பாலம் அமைக்கும் எந்திரத்தில் மோதிய அரசு பஸ் - டிரைவர் பலி, 8 பேர் படுகாயம்
x

சிதம்பரத்தில் பாலம் அமைக்கும் எந்திரத்தில் அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்துள்ளார்.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் பாலம் அமைக்கும் பில்லர் இயந்திரத்தின் மீது, எஸ் .இ .டி .சி அரசு பேருந்து மோதி டிரைவர் பலி, எட்டு பேர் காயம்

சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு சென்ற அரசு விரைவு பஸ் பயணிகளுடன் அன்று அதிகாலை 4:30 மணியளவில் சிதம்பரம் புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தது. பஸ் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பெரும்பள்ளம் பகுதியை சேர்ந்த சகாதேவன் (57), என்பவர் ஓட்டி வந்தார்.

சிதம்பரம் அருகே பஸ் வந்த போது சாலையோரம் நின்ற பாலம் அமைக்கும் எந்திரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் சகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த சிதம்பரம் நகர போலீசார் பஸ்சில் இருந்த பணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்போது 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story