பஸ்சில் இருந்து மாணவரை தள்ளிவிட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்
பஸ்சில் இருந்து மாணவரை அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் தள்ளிவிட்ட போலீசார் விசாரணை
ஆர்.எஸ்.புரம்
மதுரை உசிலம்பட்டி பாலுசாமி நாடார் வீதியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவருடைய மகன் மோகன் பிரபு (வயது 17). இவர், பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கோவையில் உள்ள கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்குவதற்காக கோவை வந்தார்.
அவர், சிங்காநல்லூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக சீரநாயக்கன்பாளையத்தில் அரசு பஸ்சில் ஏறினார். அந்த பஸ் கண்டக்டர் சுரேஷ்குமார் என்பவர் மோகன் பிரபுவிடம், பஸ் சிங்காநல்லூர் செல்லாது, கோவை ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். அங்கிருந்து சிங்காநல்லூருக்கு செல்லுமாறு கூறினார்.
அதற்கு மோகன்பிரபு கண்டக்டரிடம் அறிவிப்பு பலகையில் சிங்காநல்லூர் செல்லும் என்று உள்ளதே என கேட்டு உள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கண்டக்டர் சுரேஷ்குமார் மற்றும் பஸ் டிரைவர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் மோகன் பிரபுவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க்கில் கீழே தள்ளி விட்டு சென்றதாக தெரிகிறது.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த மோகன்பிரபு ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.
அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கண்டக்டர், டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மோகன் பிரபு கேட்டுக்கொண்டார்.
இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் மனு ரசீது மட்டும் வழங்கினர்.
----
Reporter : S.MUTHUKUMAR_Staff Reporter Location : Coimbatore - Coimbatore