அரசு பஸ் கண்ணாடி கல்வீசி உடைப்பு


அரசு பஸ் கண்ணாடி கல்வீசி உடைப்பு
x

சங்கராபுரம் அருகே அரசு பஸ் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

புதுப்பட்டில் இருந்து சங்கராபுரம் நோக்கி நேற்று காலை 8.30 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சை வேலு என்பவர் ஓட்டினார். கண்டக்டராக பாலகிருஷ்ணன் என்பவர் பணியில் இருந்தார். கிடங்கன்பாண்டலம் வழியாக சென்றபோது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்வீசி உடைத்தனர். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு, தொடர்ந்து கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்தவர்களை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story