அரசு பஸ் கண்ணாடி உடைப்பு


அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழையூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

கீழையூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

நாகையை சேர்ந்தவர் குமார் (வயது 57). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நாகையில் இருந்து காமேஸ்வரம் மீனவர் காலனி வரை செல்லக்கூடிய டவுன் பஸ்சை ஓட்டிச் சென்றார்.மீனவர் காலனிக்கு சென்று விட்டு அங்கிருந்து நாகை நோக்கி பஸ்சை ஓட்டியபடி வந்து கொண்டிருந்தார். காமேஸ்வரம் நால்ரோடு அருகே பஸ் வந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கருங்கற்களால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

மர்ம நபா்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து கீழையூர் போலீசில் டிரைவர் குமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story