அரசு பஸ் வாய்க்காலில் கவிழ்ந்து 7 பேர் காயம்


அரசு பஸ் வாய்க்காலில் கவிழ்ந்து 7 பேர் காயம்
x

புதுக்கோட்டை அருகே அரசு பஸ் வாய்க்காலில் கவிழ்ந்து 7 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியிலிருந்து நேற்று காலை ஆவுடையார்கோவிலுக்கு அரசு பஸ் ஒன்று 20 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை டிரைவர் செல்வம் ஓட்டி சென்றார். கண்டக்டராக சண்முகநாதன் இருந்தார். விச்சூர் கண்மாய் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் பஸ்சின் கம்பிகள் மற்றும் கண்ணாடிகள் உடைந்து பயணிகள் மீது குத்தியது. இதில் கண்டக்டர் சண்முகநாதன் உள்பட 7 பேர் காயமடைந்து அலறினார்கள்.

இதையடுத்து சகபயணிகள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story