வந்தவாசி-இரும்பேடு வழித்தடத்தில் அரசு பஸ் சேவை


வந்தவாசி-இரும்பேடு வழித்தடத்தில் அரசு பஸ் சேவை
x

ஆரியாத்தூரில் வந்தவாசி-இரும்பேடு வழித்தடத்தில் அரசு பஸ் சேவையை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வழூர், ஆரியாத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்கள் பள்ளிக்கு செல்ல உரிய பஸ் வசதி இல்லாததால் அவதிப்பட்டு வந்தனர். எனவே வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை-2 சார்பில் வந்தவாசியில் இருந்து வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடுக்கு அரசு பஸ் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இதையொட்டி ஆரியாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை தாங்கினார். தி.மு.க. வந்தவாசி மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள் வரவேற்றார்.

எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கொடியசைத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

விழாவில் தி.மு.க. நகர செயலாளர் ஆ.தயாளன், போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் துரைராஜ், பணிமனை மேலாளர் விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வந்தவாசியில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும் இந்த பஸ் வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடு கிராமத்துக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு அதே கிராமங்கள் வழியாக வந்தவாசி வந்தடையும் என்று பணிமனை மேலாளர் தெரிவித்தார்.


Next Story