அரசு பஸ் திடீர் நிறுத்தம்


அரசு பஸ் திடீர் நிறுத்தம்
x

ராஜபாளையம்-ஆலங்குளம் இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ராஜபாளையம்-ஆலங்குளம் இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

அரசு பஸ்

ராஜபாளையத்திலிருந்து கன்னிதேவன்பட்டி, சாமிநாதபுரம், நல்லக்கம்மாள்புரம், காளவாசல், டி. கரிசல்குளம், சங்கரமூர்த்திபட்டி வழியாக ஆலங்குளம் வரை அரசு பஸ் இயங்கி வந்தது.

இந்த பஸ் காலை, மாலை என 2 முறை மட்டும் இயக்கப்பட்டு வந்தன. மேற்கண்ட கிராமங்களில் உள்ள மக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் ராஜபாளையத்திற்கு செல்ல இந்த பஸ் பெரிதும் உதவியாக இருந்தது. தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது.

மாணவர்கள் அவதி

இதுகுறித்து அந்தபகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

ராஜபாளையத்தில் இருந்து கன்னிதேவன்பட்டி, கரிசல்குளம் வழியாக ஆலங்குளத்திற்கு தினமும் 2 முறை இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டது.

இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த பஸ் எண்ணற்ற கிராமங்கள் வழியாக வருவதால் நிறைய பேர் பயனடைந்து வந்தனர்.

எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்ைச மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story