அரசினர் குழந்தைகள் இல்ல மாணவன் மாயம்


அரசினர் குழந்தைகள் இல்ல மாணவன் மாயம்
x

ராணிப்பேட்டையில் அரசினர் குழந்தைகள் இல்ல மாணவன் மாயமானான்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே உள்ள காரை கூட்ரோடு பகுதியில் சமூகநல பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி ராணிப்பேட்டையை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த இல்லத்தில் தங்கி, ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளிக்கு சென்றுள்ளான். ஆனால் மீண்டும் இல்லத்திற்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் ஊழியர்கள் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து சிறார்கள் இல்லத்தின் கண்காணிப்பாளர் கண்ணன் ராதா, ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.


Next Story