அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர்
கோவை கோர்ட்டு அருகே அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுற்றுலாத்துறையில் படித்து வரும் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்களை கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்துக்கு கல்லூரி சார்பில் ஒரு வாரம் சுற்றுலா அழைத்து சென்ற னர். அப்போது மாணவர்களிடம் கூடுதலாக பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து சுற்றுலாத்துறை படித்து வரும் மாணவர்கள் நேற்று மதியம் கல்லூரி முன்பு நின்று திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து மாணவர்கள் தங்களின் கோரிக்கையை கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தனர்.
Next Story