பெரம்பலூர் கோர்ட்டில் அரசு இ-சேவை மையம்
பெரம்பலூர் கோர்ட்டில் அரசு இ-சேவை மையம் திறக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, ஐகோர்ட்டு மற்றும் அனைத்து மாவட்ட கோர்ட்டு வளாகங்களிலும் அரசு இ-சேவை மையம் தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்திலும் அரசு இ-சேவை மையம் தொடங்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அரசு இ-சேவை மையத்தை தொடங்கி வைத்தார். இந்த அரசு இ-சேவை மையத்தின் மூலம் வழக்கின் நிலை, அடுத்த விசாரணை தேதி மற்றும் பிற விவரங்கள் உள்ளிட்டவைகளை பெறலாம். இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மூர்த்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜா மகேஷ்வரர், கூடுதல் உரிமையியல் நீதிபதி மகாலெட்சுமி, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் சுப்புலட்சுமி, சங்கீதா சேகர் மற்றும் அரசு வக்கீல்கள், வக்கீல்கள் சங்கங்களை சேர்ந்த வக்கீல்கள், வக்கீல்கள், வழக்காடிகள் கலந்து கொண்டனர்.