லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை; திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு


லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை; திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
x

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவள்ளூர்

அரசு ஊழியர்

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சரவணன் சென்னை ராமாபுரம் அம்பாள் நகர் பகுதியில் புதிய இடம் வாங்கி வீடு கட்டினார். வீட்டின் சொத்து வரியை தன் பெயருக்கு வழங்க வேண்டும் என அவர் கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ராமாபுரத்தில் உள்ள மாநகராட்சியில் மனு கொடுத்தார்.

ரூ.3 ஆயிரம் லஞ்சம்

அப்போது அங்கிருந்த வரி வசூலிக்கும் விஜயரங்கன் சரவணனிடம் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இதுகுறித்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதை தொடர்ந்து லஞ்சப்பணத்தை விஜயரங்கன் பெற்ற போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

3 ஆண்டு சிறை

இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி வேலராஸ் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து விஜயரங்கனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.


Next Story