அரசு பணியாளர்கள் மனித சங்கிலி போராட்டம்


அரசு பணியாளர்கள் மனித சங்கிலி போராட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம்

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சிவக்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.. பொதுவினியோகத் திட்டத்திற்கு தனி துறையை உருவாக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story