அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கண்டாச்சிமங்கலம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரசேகர், வட்ட செயலாளர் கணேசன், பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் வரவேற்றார். இதில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மறுக்கப்பட்ட அனைத்து அகவிலைப்படி நிலுவைகளையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, நிர்வாகிகள் அமுதா, சங்கீதா, பொற்செல்வி, சகுந்தலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட இணை செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார். இதேபோல் தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.