அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்


அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்
x

வத்திராயிருப்பு அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி அமைச்சியார்புரம் காலனியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). அரசு பஸ் டிரைவர். இவர் கூமாப்பட்டியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பஸ்சை ஓட்டிச் சென்றார். அப்போது ராமசாமியாபுரம் அம்பேத்கர் சிலை அருகே பஸ் வந்த போது அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் (20), புலிப்பாண்டி (19), மாயி (எ) விக்னேஷ் (20) ஆகியோர் மதுபோதையில் அரசு பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் பஸ் ஓட்டி வந்த முருகேசனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்துள்ளதாகவும், மேலும் பாட்டிலால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அரசு பஸ் டிரைவர் முருகேசன் புகார் கொடுத்ததின் பேரில் முனீஸ்வரன், புலிப்பாண்டி, மாயி என்ற விக்னேஷ் ஆகிய 3 பேரையும் கூமாப்பட்டி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story