அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்தும், சிகிச்சையில் ஏதாவது குறைகள் உள்ளனவா என கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளுக்கு வழங்கும் மருந்து மாத்திரைகள் இருப்பு போதுமானதாக உள்ளதா என பார்வையிட்டு, டாக்டர்கள் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story