"ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள அரசு தயாராக உள்ளது" - அமைச்சர் சாமிநாதன்
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம் செய்வது வழக்கமானது என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம் செய்வது வழக்கமானது என்றும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும், கருத்துக்களையும் அரசு ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story