அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மா உணவகத்தை திறக்க கோரிக்கை


அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  அம்மா உணவகத்தை திறக்க கோரிக்கை
x

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மா உணவகத்தை திறக்க வேண்டும் என இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்தனர்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இந்து முன்னணி தேனி நகர துணைத்தலைவர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் வந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் செயல்படாமல் உள்ளது. அதை மீண்டும் திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதுபோல், தேனி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தை புதிய பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தனர்.


Next Story