சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டது தமிழ்நாடு அரசு - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
சென்னை,
சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
பின்னர் பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ,
அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதி அன்பு செலுத்த வேண்டும் என்பதே திராவிட மாடல்" சமத்துவ விழாவாக நடைபெறும் இதுபோன்ற விழாக்களில் தவறாமல் கலந்து கொள்வதை எனது கடமையாக கருதுகிறேன்.
மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா காலத்தில் கல்வியை விட்டுச்சென்ற 2 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தது, மாற்று திறனாளிகளுக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு நடை பாதை அமைத்தது போன்ற சாதனைகள்தான் திமுக அரசின் .அடையாளம்,
சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டது தமிழ்நாடு அரசு.அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான உதவித்தொகை விவகாரத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றாவிட்டால், தமிழ்நாடு அரசு முடிந்தளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளும்.என தெரிவித்துள்ளார்.