அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்


அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
x

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை அருகே புதுப்பட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வரும் நேரத்திலும், கல்லூரி விட்டு வீட்டிற்கு செல்லும் நேரத்திலும் போதிய பஸ் வசதி இல்லை என்று கூறி கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தினால் பஸ் படிக்கட்டுகளில் கல்லூரிக்கு தொங்கிக் கொண்டு வருகின்ற அவலநிலை உள்ளது. இதுகுறித்து பல்வேறு மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முறையாக பஸ் வசதி செய்து தரப்படும் என்று கூறியதன் பேரில், மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story