அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றிய கூட்டம்


அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றிய கூட்டம்
x

அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றிய கூட்டம் நடந்தது.

திருச்சி

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தர்மர் முன்னிலை வகித்தார். காலியாக உள்ள மூன்றாம் நிலை நூலகர் பணி இடங்களில் ஊர்ப்புற நூலகர்களை நியமனம் செய்ய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத்தை மாற்றி பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து, ஊதியம் பெறுவதை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, செயலாளர் சதீஷ்பாபு ஆகியோர் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன், துணைத்தலைவர் ராஜசேகரன், தலைமை நிலைய செயலாளர் யசோதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.


Next Story