மாவட்ட தடகள போட்டியில் மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை

நாமக்கல்
மோகனூர்:
நாமக்கல் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் வட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஓட்ட பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மேலும், 76 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் சுடரொளி மற்றும் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.
Next Story